search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்"

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

    கடலூர்:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

    பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது. இப்போராட்டத்தில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    அவர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மத்திய தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு நாளை கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி நாளை சென்னை தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த இரு முடிவுகளையும் பொறுத்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக இருதரப்பினரும் தெரிவித்தனர். இந்த நிலையில் என்.எல்.சி. நிர்வாகம் எங்களது புதிய கோரிக்கைகளை நிறைவேற்ற தயங்குகிறது. எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.

    • என்.எல்.சி. 2-வது சுரங்கத்தை ஜீவா தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களில் 5 ஆயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்கள். 12 ஆயிரம் பேர் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள். என்.எல்.சி. நீரோட்டத்துக்காக வீடு, நிலம் வழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததை அடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை நெய்வேலி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலுக்கு மாற்றினர்.

    நேற்று என்.எல்.சி. 1-வது சுரங்கம் வாசல் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று என்.எல்.சி. 2-வது சுரங்கம் வாசல் முன்பு 11-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் சுரங்க வாசல் வழியாக பணிக்கு செல்லும் நிரந்தர தொழிலாளர்களையும், சொசைட்டி தொழிலாளர்களையும் கைகூப்பி வணங்கி தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

    • என்.எல்.சி. 1-வது சுரங்கத்தை ஜீவா தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நெய்வேலியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களில் 5 ஆயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்கள். 12 ஆயிரம் பேர் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள். என்.எல்.சி. நீரோட்டத்துக்காக வீடு, நிலம் வழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை என்.எல்.சி. தலைவர் வீட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சேகர் அறிவித்து இருந்தார். ஆனால், போலீசார் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. அதனை தொடர்ந்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றினர்.

    அதன்படி நெய்வேலி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலுக்கு போராட்ட இடத்தை மாற்றினர். இன்று 10-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் என்.எல்.சி. 1-வது சுரங்கம் வாசல் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 5.30 மணிக்கு 1-வது சுரங்கத்தின் வாசல் வழியாக வேலைக்கு சென்ற நிரந்தர தொழிலாளர்களை தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கைகூப்பி வணங்கி ஆதரவு திரட்டினர்.

    நாளை (சனிக்கிழமை) 2-வது சுரங்க வாசல் முன்பு போராட்டம் நடைபெறுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நெய்வேலியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • என்.எல்.சி. தலைவர் வசிக்கும் வீட்டை நோக்கி குடும்பத்துடன் பட்டினியுடன் பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நெய்வேலி:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது போராட்டம் இன்று 9-வது நாளாக நீடித்தது. இதில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை இந்திய காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஏ.எஸ்.இளஞ்செழியன் சந்தித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிலையில் தொழிற் சங்க சிறப்பு தலைவர் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இரவு-பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் போராட்டக்களத்தில் இருந்து நேரு சாலையில் உள்ள என்.எல்.சி. தலைவர் வசிக்கும் வீட்டை நோக்கி குடும்பத்துடன் பட்டினியுடன் பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.
    திருச்சி:

    திருச்சி அரசு மருத்துவமனையில் எலக்ட்ரிக்கல், பிளம்பர் உள்பட பல்வேறு பணிகளை ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிகிச்சையில் இருந்து பெறப்படும் வருமானம் மூலம் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

    கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இது குறித்து கேட்டபோது, மருத்துவமனை நிர்வாகம் முறையாக பதில் அளிக்காததால் நேற்று காலை திடீரென பணியை புறக்கணித்தனர். உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். 

    சம்பளத்தொகையில் ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரெங்கராஜன், துப்புரவு தொழிலாளர்கள் சங்க செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதையடுத்து மருத்துவமனை இருக்கை மருத்துவ அதிகாரி(ஆர்.எம்.ஓ.) செந்தில், கண்காணிப்பாளர் (பொறுப்பு) முரளிதரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அனைவருக்கும் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
    ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஆவடி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருநின்றவூர்:

    ஆவடி நகராட்சியில் துப்புரவு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 425 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

    இதுபற்றி நகராட்சி கமி‌ஷனர், சுகாதார அலுவலரிடம் ஒப்பந்த் தொழிலாளர்கள் முறையிட்டனர். எனினும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சுகாதார அலுவலர் மொய்தீன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
    ×